மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் அளவீடு செய்யும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் அளவீடு செய்யும் முகாம்
x

சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கை, கால் அளவீடு செய்யும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை மற்றும் கால் அளவீடு செய்யும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

முகாமில் சோளிங்கர் வட்டத்துக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 32 பேருக்கு நவீன செயற்கை கை மற்றும் கால் வழங்கயுள்ள நிலையில் அதற்கான அளவீடு பணிகள் நடைபெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ், சுபாஷினி, செல்வி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், கிராம நிர்வாக உதவியாளர் சிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story