கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு: 4 பேர் கைது


கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு: 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 1:28 PM IST)
t-max-icont-min-icon

கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 அழகிகளை மீட்டனர்.4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கீரணத்தம் பகுதியில் வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 அழகிகளை மீட்டனர்.4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உல்லாசமாக இருக்கலாம்

கோவை பிரஸ்காலனி சாந்தி மேடு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று விட்டு வரும்போது, கீரணத்தம் புதுப்பாளையம் அருகே ஒருவர் இவர்களது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி தனது பெயர் குணசேகரன் என்றும் என்னுடன் வந்தால் நீங்கள் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம்.

அதற்கு ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் தந்தால் போதும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நந்தகுமாரும் அவரது நண்பரும் குணசேகரன் சொன்ன வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

6 அழகிகள்

அங்கு 6 அழகிகள் மற்றும் மேலும் 4 மர்ம நபர்கள் இருந்துள்ளனர், உடனே நண்பர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை. ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெளியேவந்தனர். வருகிற வழியில் கோவில்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அவரிடம், சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். கீரணத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள பி.கே.லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்ட போது துடியலூர், சாய்பாபாகாலனி, நல்லாம்பாளையம், மற்றும் உடுமலை பகுதிகளைச் சேர்ந்த 6 இளம் பெண்களை வைத்து 4 பேர் கொண்ட கும்பல் விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

4 பேர் கைது

இதனைத் தொடர்ந்து போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 6 அழகிகளை மீட்டனர். மேலும் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரது மகன் குணசேகரன் (45), சுந்தராபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் முருகவேல் (30), பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் விஜயகுமார் (40), ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மகேந்திரன் (28) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட அழகிகளை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story