வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; புரோக்கர்கள் 2 பேர் கைது


வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; புரோக்கர்கள் 2 பேர் கைது
x

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

கே.கே.நகர், செப்.8-

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விபசாரம்

திருச்சி கே.கே.நகர் கோவர்த்தன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதிக்கு சென்று அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 3 பெண்கள், 2 ஆண்கள் இருந்தனர்.

விசாரணையில், அவர்கள் அய்யப்பன் நகரை சேர்ந்த வைத்தியநாதன் (வயது 47), அரியலூர் மாவட்டம் கூத்தூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பதும், 2 பேரும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண், தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்த 24 வயது இளம் பெண், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த 33 வயது பெண் ஆகியோரை வைத்து விபசார தொழில் செய்துவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், 3 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


Next Story