சேலத்தில் வீடு வாடகை எடுத்து விபசாரம்


சேலத்தில் வீடு வாடகை எடுத்து விபசாரம்
x

சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விபசாரம்

சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அந்த வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

அங்கு விபசார புரோக்கர்களாக செயல்பட்டு வந்ததாக ரஜினி (வயது 46), அவருடைய மனைவி புவனேஸ்வரி (36) மற்றும் செல்வராணி (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் கைது

இவர்கள் கடந்த ஒரு மாதமாக விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த தர்மபுரியை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, கைதான செல்வராணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story