சங்கராபுரத்தில் 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரம்; 8 அழகிகள் கைது
சங்கராபுரத்தில் 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 8 அழகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்கராபுரம்,
வீடுகளில் விபசாரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகருக்குட்பட்ட மயிலாம்பாறை, பொய்குணம் சாலை, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகே உள்ள 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்க பெற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 3 பெண்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து, செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார், 3 வீடுகளில் இருந்த 8 அழகிகள் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளரான சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டை சேர்ந்த துரை (43) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.