2 இளம்பெண்களை வைத்து விபசாரம்; பெண் கைது


2 இளம்பெண்களை வைத்து விபசாரம்; பெண் கைது
x

2 இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாநகர விபசாரத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 2 இளம்பெண்களை ஒரு பெண் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பெண் லால்குடி நன்னிமங்கலம் பகுதியை சேர்ந்த ஆரோக்கியசகாயராணி (வயது 32) என்பதும், புத்தூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, விபசாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 இளம்பெண்களையும் மீட்ட போலீசார், ஆரோக்கிய சகாயராணியை கைது செய்தனர். பின்னர் அவர், திருச்சி 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story