ஓட்டலில் திருடிய புரோட்டா மாஸ்டர் கைது
நெகமம் அருகே ஓட்டலில் திருடிய புரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
நெகமம்
கர்நாடகா மாநிலம், மைசூரை சேர்ந்தவர் மகாதேவ் பிரசாத் (வயது 22). இவர் நெகமத்தை அடுத்த காட்டம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை மகாதேவ் பிரசாத் தான் வேலை பார்த்த ஓட்டலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார்.
பின்னர் அங்கிருந்த பிஸ்கட், பன், பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை திருடிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த நெகமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் மகாதேவ்வை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வேலை பார்த்த ஓட்டலிலேயே அவர் திருடியது தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் பூபாலன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாதேவ் பிரசாத்தை கைது செய்தனர்.