புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை


புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை
x

முதுகுளத்தூர் அருகே புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே புரோட்டா மாஸ்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

கள்ளத்தொடர்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுராஜ்(வயது 33). இவருக்கும் கோமளா தேவி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருந்து வேறுபாடால் கோமளா தேவி, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வியை பாபுராஜ் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாபுராஜ் வெளிநாட்டில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

கொலை

இந்தநிலையில் பாபுராஜ் வீட்டின் அருகே வசிக்கும் இருளக்குமாருக்கும், தமிழ்செல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு பாபுராஜ் வந்தார். அப்போது மனைவியின் கள்ளக்காதலை அறிந்து அவரை கண்டித்துள்ளார்.

இதற்கிடையே தமிழ்ச்செல்விக்கு இருளக்குமார் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பாபுராஜ் இருளக்குமாரை கண்டித்தார். அப்போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த இருளக்குமார், உருட்டு கட்டை மற்றும் கையால் பாபுராஜை அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாபுராஜை முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபுராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருளக்குமாரை கைது செய்தனர்.


Next Story