நாமக்கல் அருகே சாலையோரம் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி
நாமக்கல் அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
சேந்தமங்கலம்:
நாமக்கல்லில் இருந்து கம்ளாய் செல்லும் வழியில் நகராட்சிக்கு சொந்தமான பகுதி உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோரம் சுமார் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு கருதி பச்சை தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதி வழியாக செல்வோர் பார்க்கும்போது மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது போன்றது போல் உள்ளது. இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story