கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்


கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்
x

கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர் உரிமை சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

விருதுநகர்


கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என துப்புரவு பணியாளர் உரிமை சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

தமிழ்நாடு துப்புரவு பணியாளர் உரிமை சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ காப்பீடு பாதுகாப்பு உபகரணங்கள், பணி தொடர்பான கருவிகள், பாதுகாப்பு உடை போன்றவற்றை குறைவில்லாமல் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டும். கிராமப்புற தூய்மை பணியாளர்களை கவுரவமாக நடத்த உத்தரவிட வேண்டும்.

பணி நேரத்தை தமிழக முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். முழு நேர ஊழியர் கிராமப்புற பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும்.

ஊதிய நிலுவை

ஊதிய முரண்பாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். கிராம பகுதிகளில் மக்கள் தொகை அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கான அரசு உத்தரவுகள் அனைத்தும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஊதியநிலுவையை கணக்கிட்டு தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு அவரவர் பெயரில் உள்ள வங்கி கணக்கில் ஊதியத்தை வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் சிறப்பு பணியாக செய்தமைக்காக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story