தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


தேன்கனிக்கோட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 7:00 PM GMT (Updated: 6 July 2023 6:33 AM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். அரசின் கொள்முதலை அனைத்து பொருட்களுக்கும் உத்தரப்படுத்த வேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். எண்ணெய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும், மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட சின்ன பென்னங்கூர் அருகே காய்கறி மார்க்கெட் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இதில் மாநில மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி, மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமன், மகளிர் அணி செயலாளர் தீபா, மாவட்ட பொருளாளர் முனிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story