நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Aug 2023 1:00 AM IST (Updated: 15 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள், இப்பகுதி மக்களுக்கு, குடிநீர் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வந்தது. கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலிக்குடங்களுடன் நல்லம்பள்ளி-நாகர்கூடல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story