கண்டன ஆர்ப்பாட்டம்


கண்டன ஆர்ப்பாட்டம்
x

கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி

கடையம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து கந்துவட்டி கும்பலால் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி கடையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் முத்துராஜன் தலைமை தாங்கினார். மாதர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாரதி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சின்னத்தாய், பூங்கொடி, முருகையாபாண்டியன், விவசாய சங்கம் சுப்பையா, கடையம் சி.பி.எம். ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்னன், மாதர் சங்கம் மா.தலைவர் ஆயிஷாபேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பால்ராஜ் ஆகியோர் கட்டண உரையாற்றினர்கள். இதில் சம்பன்குளம் சி.பி.எம். செயலாளர் செந்தில்வேல், அழகப்பபுரம் செயலாளர் முத்தையா, தர்மராஜ், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story