குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரிபென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகைஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
பென்னாகரம்:
குடியிருப்பில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகோரி பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்தை இருளர் இன மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வினியோகம்
பென்னாகரம் பேரூராட்சி போடூர் அருகே உள்ள சருக்கல்பாறை இருளர் இன குடியிருப்பில் 30-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் 25-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களுக்கு சாலை, குடிநீர் கழிப்பிட வசதிகளுடன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருளர் இன மக்கள் குடியிருப்பில் போதுமான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் குடியிருப்பில் சிமெண்டு சாலைகள் ஆங்காங்கே பெயர்ந்தும் காணப்பட்டது. இதுகுறித்து இருளர் மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த 30-க்கும் மேற்பட்ட இருளர் இன மலைவாழ் மக்கள் நேற்று தங்களது குழந்தைகளுடன் பென்னாகரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கோபால் ஆகியோர்கள் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகள் குறித்து மாவட்ட பழங்குடியின நல அலுவலரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் கோபால் ஆகியோர் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கோரிக்கைகள் குறித்து மாவட்ட பழங்குடியின நல அலுவலரிடம் தெரிவிப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே போடூர் சருக்கல் பாறை இருளர் இன மலைவாழ் மக்கள் குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை குறித்து செயல் அலுவலர் கீதா ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.