மோகனூர் தாலுகாவில்சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


மோகனூர் தாலுகாவில்சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:30 AM IST (Updated: 17 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாமக்கல்

மோகனூர் தாலுகா வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் சுற்றுப்புற பகுதிகளில் `சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே மோகனூர் பகுதியில் `சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி `சிப்காட் எதிர்ப்பு இயக்கம்' உருவாக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மோகனூர் பகுதியில் அரசு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கக்காரி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சிப்காட் ஆதரவு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் வக்கீல் கைலாசம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் மகேஸ்குமார், வேலுபாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது சிப்காட் தொழிற்பேட்டை அமைக்ககோரி கோஷங்க்ள எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story