அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2023 12:30 AM IST (Updated: 17 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் பெற எளிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எச்.எம்.எஸ்.கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.மாதேஸ்வரன், துணை தலைவர் ஏ.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு அமைப்புசாரா நலவாரியங்களுக்கு நிரந்தர நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story