பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் மீதான வரிகளை கைவிடுவதோடு, அவற்றின் விலை உயர்வுகளை திரும்ப பெற வேண்டும். வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். விசைத்தறி தொழிலை பாதுகாக்க பருத்தி மற்றும நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காலிப்பணியிடங்கள்

அதேபோல் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்க நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை கொண்டு வரவேண்டும். ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மேலும் மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலுசாமி, அசோகன், ஜெயமணி, சுரேஷ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வணங்காமுடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story