நாமக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

வேலைநிறுத்தம்

பொது வினியோக திட்டத்திற்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து, அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலை படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதில் சுமார் 50 சதவீத பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் வரவேற்றுபேசினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சரவணன் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கொரோனா நிவாரண பொருட்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களைஎழுப்பினர்.


Next Story