கடிதம் அனுப்பும் போராட்டம்


கடிதம் அனுப்பும் போராட்டம்
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி திருப்புல்லாணி யூனியன் அலுவலக பணியாளர்கள் ஒட்டு மொத்தமாக தபால் அனுப்பினர். கடந்த தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். இதன்மூலம் அரசுக்கு உடனடியாக ரூ.26 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைப்பதுடன் மாதந்தோறும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தும் பங்களிப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியால் ஏற்படும் நிதிச்சுமை தவிர்க்கப்படும். பங்களிப்பு ஓய்வூதிய சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை. எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய சட்ட ரீதியாக தடை இல்லை. அரசு ஊழியர்களுக்கு பயன் இல்லாத புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் மூலம் அனுப்பிய மனுவில் கோரி உள்ளனர்.


Next Story