மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x

கடல்அட்டை மீதான தடையை நீக்கக்கோரி ராமநாத புரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

கடல்அட்டை மீதான தடையை நீக்கக்கோரி ராமநாத புரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

கடல் அட்டை மீதான தடையை நீக்கக்கோரி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் தொழிலாளர் சங்கம் மாநில தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் மாநில செயலாளர்கள் சின்னதம்பி, ராஜன், இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாவட்ட செயலாளர் முருகபூபதி, ராமநாதபுரம் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில செயலாளர் சின்னதம்பி கூறியதாவது:- கடல் அட்டை, மீன் மீதான தடையை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு கடல் அட்டை சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

கடல் அட்டை மீதான தடையை நீக்க தமிழக சட்ட மன்றத்தில் முதல்-அமைச்சர் வரும் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மனு

இதுதொடர்பாக மீனவர்கள் கலெக்டர் ஜானிடாம்வர்கீசை சந்தித்து மனு அளித்தனர். மீனவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கலெக்டர் உறுதிஅளித்தார்.


Next Story