ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை
30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு 1.1.2022 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டும், அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு கைவிட்டு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு ஆரப்்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, துணை தலைவர் மாலா, செயலாளர் கணேசன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கண்டன கோஷங்கள்

அதே போல இளையான்குடியில் வட்டார தலைவர் அமல்ராஜ் தலைமையிலும், தேவகோட்டையில் வட்டார தலைவர் ராஜம்மாள் தலைமையிலும், கரைக்குடியில் வட்டார தலைவர் ஜோசப்துரை தலைமையிலும், சிங்கம்புணரியில் வட்டார தலைவர் லதா தலைமையிலும், எஸ்.புதூரில் பிராங்கிளின் ஆரோக்கிய ஜேசுதாஸ் தலைமையிலும், திருப்பத்தூரில் தலைவர் ஸ்ரீதர்ராவ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்புவனத்தில் தலைவர் மீனா தலைமையிலும், கல்லலில் தலைவர் ஆரோக்கிய லூயிஸ் லெவே தலைமையிலும், மானாமதுரையில் பாலகுமார் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story