தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

சிவகங்கை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மின் கட்டண உயர்வு மற்றும் உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமை தாங்கினார். மாநில மாணவரணி துணை செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் அருணாகண்ணன், துணை செயலாளர் துரைபாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பைசூர்ரகுமான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குரு.அன்பரசன், மாணவரணி செயலாளர் பூமிநாதன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் செல்லக்கண் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



Next Story