மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
திருப்புவனம்,
பூவந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களின் கவனக்குறைவால் இறந்த குழந்தைக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆஸ்பத்திரி முன்பு நடைபெற்றது. கிளை செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் பேசினார்கள்.
இதில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், ரவி, ஜேம்ஸ் ராஜா, நிருபன் சக்கரவர்த்தி, பூவந்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story