ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி 5 விளக்கு அருகே ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான போக்கை கைவிட வலியுறுத்தியும், மாநில அரசின் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டண உயர்வை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன், அரசு போக்குவரத்து கழக சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மணவழகன், மண்டல தலைவர் முருகேசன், மாநில குழு உறுப்பினர் கண்ணன், நகர செயலாளர் காமராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சிவாஜி காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story