தர்மபுரியில் ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள், போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில இணைச்செயலாளர் குப்புசாமி, தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்க மாநில துணை தலைவர் கோபாலன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜயன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முதியோர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வூதியம் கிடைக்கவும், தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.