ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக 11 பேர் போராட்டம்
ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக 11 பேர் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
சாயல்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சிறைக்குளம் ஊராட்சி கழநீர்மங்களம் கிராமத்தை சேர்ந்த 11 பேரை பொதுப் பிரச்சினை காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், பொதுக்கண்மாயில் குளிக்கவும், குடிநீர் குழாய் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிக்கல் போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, 11 பேரும் தங்களது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story