கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு காமராஜர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமர், தொழிலாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு 5 ரூபாய் ஆயிரம் போனஸ் தொகை வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் வழங்கப்படும் சிறப்பு பரிசு தொகுப்பினை தவறாமல் வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகை மாதம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதுடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும். தொழிலாளர் குழந்தைகளுக்கு 3-ம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story