சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை
தேவகோட்டை,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க தேவகோட்டை மற்றும் கன்னங்குடி ஒன்றியங்களின் சார்பில் மாநில அளவிலான காளி தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவகோட்டை யூனியன் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதன் தலைமை தாங்கினார். மாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆல்பர்ட்ராஜ், சண்முகம், செல்லையா, வெள்ளைச்சாமி, குணசேகரன் ஆகியோர் பேசினர். மாரியப்பன், ஜெகநாதன் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சட்டபூர்வ பென்ஷன் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், அகவிலை படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாயாண்டி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story