தர்மபுரி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி  பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செம்மாண்டகுப்பம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அர்சுனன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர் ரவி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மீனாட்சி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பால் கொள்முதல் விலையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்த வேண்டும். ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 என விலையை உயர்த்தி வழங்கவேண்டும். ஆவின் பால் விற்பனை விலையை குறைத்ததால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய மாநில அரசு ரூ.300 கோடியை வழங்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யவேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.தமிழ்நாடு அரசு ரூ.500 கோடியை சுழல் நிதியாக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.பால் அளவு, தரம், இவற்றை பால் வழங்கும் இடத்திலேயே குறித்து கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் சேர்த்து வழங்கவேண்டும்.தீபாவளிக்கு முன்பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story