நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்  பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி ராமசாமி முன்னிலை வகித்தார். முடிக்கப்பட்ட 18 மாத பஞ்ச பணிகளை வழங்க கோரியும், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஐ.டி.ஏ. சம்பள விகிதத்தில் 15 சதவீதம் ஓய்வூதியத்தை மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் 14-வது அமைப்பு தினத்தையொட்டி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கிளை செயலாளர் ராமசாமி, பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story