இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல சேவை அமைப்பினர் ேபாராட்டம்


இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல சேவை அமைப்பினர் ேபாராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீட்டுமனை பட்டா வழங்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல சேவை அமைப்பினர் ேபாராட்டம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் 471 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்து உள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை போராட்டங்களையும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பின் நிறுவனர் ஈஸ்வரி தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் வாடகை வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் சாைல மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் பின்னர் மாலையில் அவர்களை விடுதலை செய்தனர்.


Next Story