ஊராட்சி தலைவரை பதவிநீக்கம் செய்யக்கோரி கண்ணில் கருப்புத்துணி கட்டி வார்டு உறுப்பினர்கள் தர்ணா


ஊராட்சி தலைவரை பதவிநீக்கம் செய்யக்கோரி கண்ணில் கருப்புத்துணி கட்டி வார்டு உறுப்பினர்கள் தர்ணா
x

அய்யக்கோட்டை ஊராட்சி தலைவரை பதவிநீக்கம் செய்யக்கோரி கண்ணில் கருப்புத்துணி கட்டி வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முனிராஜா, பரந்தாமன், செல்வமகாமுனி, நாகஜோதி, சரண்யா, இளங்கோவன் ஆகிய 6 பேரும் இன்று காலை ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் தங்களது கண்ணில் கருப்புத்துணிைய கட்டிக்கொண்டு, ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அய்யக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர், வார்டு பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் எங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார். எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரங்கராஜன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல் அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜ், துணைத்தலைவர் வசந்திமயில் ஆகியோரை வரவழைத்து அதிகாரிகள் சமரசம் பேசினர். பின்னர் வார்டு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் வார்டு உறுப்பினர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரங்கராஜனிடம் கூறுகையில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி புகார்களை பெற்று, குற்றச்சாட்டின் உண்மை தண்மை குறித்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த போராட்டத்தால் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story