நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

பொதுத்துறை வங்கிகளின் தன்னிச்சையான போக்கு, ஊழியர்களை தன்னிச்சையாக இடமாற்றம் செய்வது என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இன்று (சனிக்கிழமை) வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று நாமக்கல்லில் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணிகளை தனியாரிடம் கொடுப்பதை கண்டித்தும், பொதுத்துறை வங்கிகளின் தன்னிச்சையான போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்த சரத்துகள் மீறப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் சங்க நிர்வாகிகள் முருகேசன், வெங்கட சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story