பரமத்திவேலூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
பரமத்திவேலூர்:
பரமத்தி நகருக்குள் வர மறுக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களை கண்டித்து நேற்று பா.ஜ.க. சார்பில் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரமத்தி பா.ஜ.க. ஒன்றிய தலைவர் அருண் தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேல், மாவட்ட பிரசார பிரிவு துணைத்தலைவர் மூர்த்தி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட துணைத்தலைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பரமத்திவேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணனிடம் புகார் மனு அளித்தனர். இதில் ஊடகப்பிரிவை சேர்ந்த செல்வராஜ், சுகந்திரன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story