நாமக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


நாமக்கல்லில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி முள்ளம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன்- சுமதி தம்பதி மகன் ஆகாஷ் கடந்த அக்ேடாபர் மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆகாஷ் கொலைக்கு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட உதவி தலைவர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பூபதி, ஜோதி, செல்வராஜ், இந்திய ஜன சங்கத்தின் நிறுவனர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து அங்கு வந்த நல்லிபாளையம் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story