பாலக்கோட்டில்தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாலக்கோட்டில்தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 6:45 PM GMT (Updated: 22 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை விரும்பி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மாணிக்கம், மாவட்ட துணை தலைவர் சிவன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் ஆரூரான் சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் வட்டியுடன் ஒரே தவணையாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் பெற்ற கரும்புக்குரிய நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு பாலக்கோடு வட்டார செயலாளர்கள் மாதப்பன், பாப்பாரப்பட்டி பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பென்னாகரம் வட்டார தலைவர் முனுராஜ், துணைத்தலைவர் சின்னசாமி, வட்டார செயலாளர்கள் சின்னராஜ், செல்வம், பொருளாளர் ராஜா, நிர்வாகி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story