ஆவத்திபாளையத்தில்கரும்பு விவசாயிகள் திடீர் போராட்டம்
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையத்தில் நேற்று காலை களியனூர், எலந்தகுட்டை பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பொங்கலுக்காக தமிழக அரசு சமயசங்கிலி பகுதியில் கரும்பு எடுத்துள்ளதாகவும், தங்கள் பகுதியில் கரும்பு எடுக்கவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாவட்ட கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story