பள்ளிபாளையத்தில்ஜனநாயக மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோட்டில் நேற்று ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிபாளையம் நகர தலைவர் சம்பத், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, மாவட்ட நிர்வாகி சக்திவேல், பொருளாளர் அகிலாண்டேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அதற்குரிய மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதியில் உள்ள சந்து மதுக்கடைகளை அகற்ற வேண்டும். மின்சார கட்டண உயர்வு, ஆவின் பால் உயர்வு, வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கோவை, சென்னை பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்