நாமக்கல்லில்தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே உள்ள இறையூரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி தண்ணீரில் மனித கழிவுகளை கலந்த மர்ம நபர்களை கண்டித்து தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரவினோத் சேகுவாரா தலைமை தாங்கினார். நாமக்கல் நகர செயலாளர் உமா மகேஸ்வரன் வரவேற்று பேசினார். மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் செந்தமிழன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் ஹிட்டாச்சி சிவா, மேற்கு மண்டல பொறுப்பாளர் அறிவு தமிழன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. மணிமாறன், அருந்ததியர் மக்கள் இயக்க துணை பொது செயலாளர் ரஜினி என்கின்ற ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story