நாமக்கல்லில்போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:16:07+05:30)
நாமக்கல்

தமிழக சட்டசபையில் கடந்த 9-ந் தேதி உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார். இதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். இதில் கவர்னரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story