எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் நல சங்கத்தினர் போராட்டம்
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய மாற்றத்தை கடந்த நவம்பர் மாதம் அமல்படுத்தியது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவில்லை.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்தகோரியும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அந்தந்த சுகாதார நிலையங்கள் முன்பு கோரிக்கை அட்டைகளை அணிந்து கொண்டு போராட்டம் நடத்தினர். அதன்படி நாமக்கல்லில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் சுகந்தா, பொருளாளர் சிங்காரம், செயற்குழு உறுப்பினர்கள் சித்ரா, கிருஷ்ணமூர்த்தி, செந்தில் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.