விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கொட்டிய செயலை கண்டித்தும், இதில் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். கவிஞர் இளமாறன், வீர செங்கோலன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நாமக்கல் நகர செயலாளர் வணங்காமுடி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் அரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story