உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி. சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சிவராஜ். சி.ஐ.டி.யு மாவட்ட உதவி செயலாளர் சுரேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் வாழ்த்தி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேன்டும். தூய்மை பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.