எருமப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்
எருமப்பட்டி:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேலநிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தப்படுத்திய நபர்களை கைது செய்யக்கோரியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டக்கோரியும் எருமப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பு குழு நிர்வாகி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நாமக்கல் அமைப்பு குழுவை சேர்ந்த சிவசந்திரன் தலைமை தாங்கினார். அப்போது வேங்கைவயல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சசிகுமார், ராமகிருஷ்ணன், மாலா, ஸ்ரீதர், கணேசன், கருப்பண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story