தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஊர்வலத்தை அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க கோட்ட இணைச்செயலாளர் மாதேஸ்வரன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தின் முடிவில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story