நாமக்கல்லில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:30 AM IST (Updated: 11 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஊர்வலமாக சென்றனர். நாமக்கல் அண்ணா சிலை அருகே தொடங்கிய ஊர்வலமானது, பரமத்தி ரோடு மற்றும் குளக்கரை தெரு வழியாக நாமக்கல் பூங்கா சாலை வந்தடைந்து முடிவுற்றது. பின்னர் அங்கு 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 115-ஐ ரத்து செய்ய கோரியும், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.


Next Story