பாலக்கோடு, பாப்பாரப்பட்டியில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு:
பாலக்கோடு, பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பாலக்கோடு பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய நிதி நிலை அறிக்கையை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் வட்ட குழு தலைவர் காரல் மார்க்ஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான முதலீட்டை பெருமளவு உயர்த்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரித்து ஊதியத்தை உயர்த்துவது, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பபெறுவது என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன், வட்ட செயலாளர் ராமச்சந்திரன், வட்ட குழு உறுப்பினர்கள் முருகன், நக்கீரன், ராஜா, சந்திரசேகரன், கோவிந்தசாமி, காவியா, கோவிந்தராஜ், சமது, ஆறுமுகம், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் பாண்டியம்மாள் நன்றி கூறினார்.
பாப்பாரப்பட்டி
பாப்பாரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். ராஜாமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகி மனோன்மணி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர் ராதிகா அன்பரசு, வட்டார நிர்வாகிகள் சண்முகம், சிலம்பரசன், சின்னராஜ், லோகநாதன், செல்வராஜி, மணிகண்டன், கிளை செயலாளர்கள் ரஜினி, ராஜசேகர், ராஜமாணிக்கம், கந்தசாமி, எல்லப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார நிர்வாகி சக்திவேல் நன்றி கூறினார்.