பாப்பிரெட்டிப்பட்டியில்வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பாப்பிரெட்டிப்பட்டியில்வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2023 7:00 PM GMT (Updated: 10 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தாசில்தார் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தனி தாசில்தார் மில்லர் உள்பட வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story