ராசிபுரம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்


ராசிபுரம் அரசு கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 March 2023 12:15 AM IST (Updated: 22 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த பூங்கா ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரிக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. மேலும் இதுதொடர்பாக ஆய்வு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கக்கூடாது என தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் கல்லூரி முதல்வர் பானுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

1 More update

Next Story