சிப்காட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றகோரிவளையப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம்

மோகனூர்:
மோகனூர் அருகே வளையப்பட்டி, அரூர் ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அங்கிருந்த சிலர் சிப்காட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் ஊராட்சி தலைவர், செயலாளர், அதிகாரிகள், எந்த தீர்மானத்தையும் எழுதாமல் காலம் தாழ்த்தினர்.
இதையொட்டி கோபம் அடைந்த பொதுமக்கள் கிராமசபை கூட்டம் என்பது பொதுமக்களால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் சொல்வதை தீர்மானங்களாக நிறைவேற்றக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் எழுதுவோம் என ஊராட்சி சார்பில் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,
அதேபோல், அரூர் ஊராட்சியில் சிப்காட் எதிர்ப்பாளர்கள் கோரிக்கையை தீர்மானமாகவும், சிப்காட் அமைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கொடுத்த தீர்மானத்தையும் ஒரே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது, .






